பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ்ப் பழமொழிகள்


அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல.

(கட்டுப் பொதி.)

அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது.

அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம். 795

அம்பலம் வேகிறது.

அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்.

(அமைத்தாற் போல.)

அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது.

அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா?

(நரி கொள்வார்களா?)

அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர். 800

அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது.

(குழை கட்டினால்.)

அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம்.

அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்.

அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா?

அம்மன் காசு கூடப் பெறாது. 805

(அம்மன் காசு-புதுக்கோட்டையில் வழங்கிய சிறிய காசு.)

அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?

அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும்.

(மதுரையில்.)

அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும்.

அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா?

அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல. 810

அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?

(வேறா? ஒரு கேடா?)

அம்மா கோதண்டராமன்.

அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவார்.

அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும்.