பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

45


அரண்மனை காத்தவனுக்கும் அடுப்பங்கரை காத்தவனுக்கும் குறைவு இல்லை. 965

அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள்.

அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம்.

அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம்.

அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை.

(பழுது போவது இல்லை.)

அரணை அலகு திறக்காது. 970

அரணை கடித்தால் உடனே மரணம்.

(அப்போதே.)

அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்.

அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும்.

அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல்.

(நல்லது.)

அரமும் அரமும் கூடினால் கின்னரம். 975

(தாக்கினால்.)

அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும்.

(சீரங்கத்தில் தாயாருக்கு அமுது செய்விப்பார்.)

அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?

அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே.

அரவின் வாய்த் தேரைபோல.

அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். 980

(வெற்றி வேற்கை.)

அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது.

(இல்லாமல்.)

அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்.

அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்.

அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி.

அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான். 985 .