பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தமிழ்ப் பழமொழிகள்


அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ?

அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே.

அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி.

அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும்.

அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும். 1035

(அசையும்; கெடும்.)

அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான்.

அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்.

அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள்.

அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது.

அருக்காமணி முருக்கம் பூ. 1040

அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா?

(அழி.)

அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது.

அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா?

அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது.

(அருங்கோடை போலும்.)

அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம். 1045

(ரோகம்.)

அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை.

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

(ஆகாசமெல்லாம் பேய்.)

அருணாம்பரமே கருணாம்பரம்.

அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா?

அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது. 1050

அரும்பு ஏறினால் குறும்பு ஏறும்.

அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா?

(நரம்பு கோணினால் நாம் அதற்கென் செய்வோம்.)

அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை.