பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

53


அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல.

(அடங்கின பிறகு.)

அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை.

(பழமொழி நானுாறு.)

அலைகடலுக்கு அணை போடலாமா? 1150

அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை.

அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு.

அலை மோதும் போதே கடலாட வேண்டும்.

(தலை முழுகவேண்டும்.)

அலையில் அகப்பட்ட துரும்பு போல.

அலையும் நாய் பசியால் இறக்காது. 1555

அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது.

அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ?

அவகடம் உடையவனே அருமை அறியான்.

அவகுணக்காரன் ஆகாசம் ஆவான்.

அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா? 1160

அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு.

(தெலுங்கும் தமிழும் கலந்தது. ஆக்கு-இலை, நாக்கு-எனக்கு, சேத்திலே-கையிலே.)

அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.

அவசரக் குடுக்கை.

அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்.

அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே. 1165

அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது.

(அரிக்கும் சட்டியிலும்.)

அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான்.

அவசரத்திலும் உபசாரமா?

அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது.

அவசரத்துக்குத் தோஷம் இல்லை. 1170

(பாவம் இல்லை.)

அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம்.

(புணர அழைத்தாளாம்.)