பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

55


அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்.

(சுலபமாய்.)

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல.

(அவலைச் சாக்கிட்டு.)

அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு.

அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம்.

(என்பது புண்ணியம்.)

அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா? 1200

அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள்.

(ஆயிரம் பேர் வருவார்கள். லட்சம் பேர் மயங்கிப் போவார்கள்.)

அவள் அழகைப் பார்த்தால் கிள்ளித் தின்னலாம் என்று இருக்கிறது

(போலிருக்கிறது.)

அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான்.

அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள்.

(பண்ணி ஏழு வலம் வருவாள்.)

அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது. 1205

அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது.

அவள் சாட்டிலே திரை சாட்டா?

அவள் சொல் உனக்குக் குரு வாக்கு.

அவள் பாடுவது குயில் கூவுவது போல.

அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை. 1210

அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம்.

அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது.

அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும்.

அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.

அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு. 1215

அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும்,

அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா?

அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்?

அவன் அசையாமல் அனுவும் அசையாது.

அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. 1220

அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார்.