பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

65


அற்றதுக்கு உற்ற தாய்.

அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம்.

அற்றது பற்று எனில் உற்றது வீடு. 1475

(கொன்றை வேந்தன்.)

அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை.

அறிக் கல்வி முழு மொட்டை.

அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான்.

அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது.

அறக் குழைத்தாலும் குழைப்பாள்; அரிசியாய் வைத்தாலும் வைப்பாள். 1480

அறக் கூர்மை முழு மொட்டை.

அறங்கையும் புறங்கையும் நக்குதே.

(பி-ம்.) அகங்கையும்.

அறச் செட்டு முழு நஷ்டம்.

அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி.

அற நனைந்தவருக்குக் கூதல் என்ன? 1485

(பி-ம்.) குளிர் என்ன?

அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும்.

அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல.

(இது தவறான பாடம்.)

அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம்.

அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான்.

(பி-ம்.) கொள்ளவும்.

அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம். 1490

அறப் பேசி உறவாட வேண்டும்.

அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு.

(பழமொழி நானூறு.)

அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும்.

அறம் செய்ய அல்லவை நீங்கி விடும்.

அறம் பெருக மறம் தகரும். 1495

அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை.

அறம் வெல்லும்; பாவம் தோற்கும்.

அற முறுக்கினால் அற்றுப் போகும்.

(பி-ம்.) முறுக்கு.