பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

7


அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்.

அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?

அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது. 40

அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா?

(பாம்.) நாய்க்குக் கூட அகவிலை தெரியும்.

அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல,

(பா-ம்.) அழுமா?

அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே.

அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல.

அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி. 45

அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்.

(பா-ம்.) பகவானுக்கு, கருத்து: கறுப்பாய் இருக்கிறான்.

அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?

(பா.ம்.) வெண்ணெய்ப் பொம்மை,

அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்.

(பா-ம்.) பிரயோகித்தது போல்.

அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும்.

அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா? 50

(பா-ம்.) விஷம் இருக்காது.

அக்கினியைக் குளிப்பாட்டி ஆனைமேல் வைத்தாற் போல,

(கருத்து: எல்லாம் கறுப்பு.)

அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல.

அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?

(பா-ம்.) கக்குகிற பிள்ளை.

அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை.

அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? 55

(அக்குத் தொக்கு-சம்பந்தம்.)

அக்குத் தொக்கு இல்லாதவன் ஆண்மையும், வெட்கம் சிக்கு இல்லாதவன் ரோஷமும் மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்,

அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கிறான்.

அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்,