பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தமிழ்ப் பழமொழிகள்


 காற்றில் அகப்பட்ட கப்பல் போல அலைகிறது மனம்.

காற்றின் இடைப்பட்ட கயவர் மனம் போல.

காற்று அடிக்கக் காற்று அடிக்க நாற்று முடி தூக்குகிறாயா?

வேர்த்து வேர்த்துவிட உம்மாச்சி பண்ணுகிறாயா? 8245


காற்றில் ஆடினதாம் கம்பங்கதிர்; அதற்குப் பயந்ததாம் சிட்டுக்குருவி.

காற்றிலே கருப்பிலே கண்டதில்லை.

காற்றடிக்கக் காற்றடிக்க நாற்றுக் கட்டு சுமக்கிறாயா?

கரிவடியக் கரிவடியச் சிவபூஜை செய்கிறாயா?

(காற்றடிக்கக் கலம் நெல்லுக் குத்துகிறாயா? கரிவடியக் கரிவடியச் சமையல் செய்கிறாயா?)

காற்றடிக்கத் தாழை பூத்தது போல். 8250


காற்று உள்ள போதே தூற்றிக்கொள்.

காற்றுக்கா, மழைக்கா, போர்த்துக் கொள்ளத் துணிக்கா?

காற்றுக் காற்றோடே போயிற்று.

காற்றுக்கு எதிர் ஏற்றிய விளக்குப் போல,

காற்றுக்கு எதிரில் துப்பினால் முகத்தில் விழும். 8255

(எதிரே முகத்துக்கு நேரே.)


காற்றிலே அகப்பட்ட கப்பல் போல் அலைகிறது மனம்.

காற்றுக்கு எதிரே ஏற்றின விளக்கைப் போல.

காற்றிலே கருப்பிலே கண்டது இல்லை.

காற்று இல்லாமல் தூசி பறக்குமா?

காற்றுக்கு எதிரே சுற்றினால் முகத்துக்கு நேரே விழும். 8260


காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு.

காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது.

காற்றுக்கோ மழைக்கோ போர்த்திக் கொள்ளத் துணி இருக்கிறதா?

காற்று காற்றோடு போயிற்று.

காற்றுப் படாமல் காப்பாற்றுகிறேன். 8265


காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?

(கபிலர் அகவல்.)