பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

119


கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல.

(கிடையா.)

கிடைக்குத் கிடை ஆடுதான்.

கிடை கிடந்த இடத்தில் மயிர் கூடக் கிடையாது.

கிடைப்பது குதிரைக் கொம்பு.

கிண்ட்யாய நம; 8300 .


கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பையிலே மயிரே புறப்படும்.

கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.

கிண்டி விட்டுக் கிளறி வைக்கிறது.

(கிளறி விடு.)

கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.

கிண்ணி பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது. 8305


கிண்ணி வைத்துக் கிண்ணி மாற்றுகிறது.

கிணற்றில் அகப்பட்டது போல.

கிணற்றில் இருக்கும் ஆமைபோல் இருப்பவனுக்கு உலகம்

தெரியுமோ?

கிணற்றில் கல்லைப் போட்டது போல.

(கிணற்றில் தள்ளிக் கல்லையும் போட்டான்.)

கிணற்றில் தண்ணீர் உதித்தது. 8310


கிணற்றில் போட்ட கல் மாதிரி.

கிணற்றில் போட்டாலும் எண்ணிப் போடு.

கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?

கிணற்றின் ஆழமும் கயிற்றின் நீளமும் பார்க்க வேண்டும்.

கிணற்று ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; நெஞ்சு ஆழத்தைக் காண முடியுமா? 8315


கிணற்றுக்குத் தப்பித் தீயில் பாய்ந்தான்.

(விழுந்தது போல.)

கிணற்றுக்குள் இருந்து பேசுகிறவனைப் போல் பேசுகிறான்.

கிணற்றுக்குள் இருப்பவனை விளக்கிட்டுத் தேடினாற்போல.

கிணற்றுக்குள்ளே கங்கை குதித்தாற் போல.

கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகும்? 8320