பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தமிழ்ப் பழமொழிகள்


 கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் சமுத்திரம்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது யார்? கேட்டது யார்?

(குடியாததை.)

கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?

கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா? 8325


கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும்.

கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.

கிணறு இருக்க மலை தோண்டாதே.

(கிடக்க மலை கல்லாதே.)

கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.

கிணறு தப்பித் துரவில் விழலாமா? 8330


கிணறு மெத்தினால் கீழ்வரை பொசியும்.

கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல.

கிணறு வெட்டித் தவளையையும் பிடித்து விடுகிறதா?

கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?

கிரக சாந்திக்கு க்ஷவரம் செய்து கொள்கிறதா? 8335


கிராக்கி மொச்சைக் கொட்டை; வராகனுக்கு இரண்டு கொட்டை.

(பத்துக் கொட்டை,)

கிராம சாந்திக்காகத் தலையைச் சிரைத்துக் கொண்டானாம்.

கிராமத்தைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான்.

கிராம தேவதை முதல் க்ஷாம தேவதை வரை ராம தேவனுக்குச் சரியாமோ?

கிரிசை கெட்டு வரிசை மாறுகிறது. 8340


கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?

கிரியை அறிந்து சொன்னால் கிழித்துக் கொள்கிறதா?

கிருக சாந்திக்கு க்ஷவரம் பண்ணுவதா?

கிருபா நிதியே கருணாநிதி.

(சருவா நிதி.)

கிருஷ்ண பட்சத்துச் சந்திரனைப் போல். 8345