பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

121


 கிருஷ்ண வாத்தியார் திவசம் பண்ணுகிறதற்கும் கிழக்கு வெளுக்கிறதற்கும் சரியாய்ப் போகும்.

கிருஷ்ணா ராமா கோவிந்தா. கிழக்கு எப்போது வெளுக்குமடா?

கிலி பிடித்ததோ? புலி பிடித்ததோ?

கிழ ஓணான் மரம் ஏறாதா?

கிழக் கிடாவைப் புகழ்கிறது இகழ்ச்சி அல்லவா? 8356


கிழக்கிலும் மேற்கிலும் கருவிலும் கடன் படாதே.

(கொடாதே.)

கிழக் குடலுக்குச் சோறும் இடி சுவருக்கு மண்ணும் இடு.

கிழக் குரங்கு குட்டி போட்டாற் போல.

கிழக் குரங்குபோல விழிக்கிறதைப் பார்.

கிழக்கே கடன் கொடாதே. 8355

(செங்கற்பட்டு வழக்கு.)


கிழட்டுக் குதிரைக்குச் சவுக்கடி கொடுத்து போல்.

கிழத்துக்குச் சாதமும் முறத்துக்குச் சாணியும்.

கிழ நாய் குரைப்பதற்கும் காரணம் உண்டோ?

கிழப் பேச்சுக் கவைக்கு உதவுமா?

கிழம் ஆனாலும் கெட்டு ஆனாலும் கட்டிக் கொண்டவன் பிழைப்பான். 8360


கிழமைக்கு வைத்து அழுவது.

(8ஆம் நாளில் திருநெல்வேலி வேளாளர் இறந்தவன் விரும்பிய பொருள்களை வைத்து அழுவார்கள்.)

கிழவன் கொடுத்த பணத்துக்கு நரை உண்டா?

கிழவன்தான் நரை, கிழவன் கொடுத்த பணமுமா நரை?

கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமா?

(கிழவி பேச்சு. கேட்குமா?)

கிழவனுக்கு வாழ்க்கைப் படுவதிலும் கிணற்றில் விழலாம். 8865


கிழவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் கடைசி வரையில் சாப்பாடு.

கிழவி இருந்த வீடும், கிளி இருந்த காடும் ஈடேற முடியா.

கிழவி கிண்ணாரம் போடுகிறாள்.

கிழவி சொல்லக் குமரி கேளாள்.

(யாழ்ப்பாண வழக்கு)