பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தமிழ்ப் பழமொழிகள்


குடி உயரக் கோல் உயரும். குடி உயர முடி உயரும். 8560


குடிக்கக் கஞ்சி இல்லை; கொப்புளிக்கப் பன்னீராம்.

குடிக்கச் செம்பும் எரிக்க விளக்கும் வேண்டாமா?

குடிக்கச்சே குமட்டினால் எடுக்கும்.

குடிக்கத் தண்ணீர் கேட்டால் குளிப்பாட்டக் கொண்டு வருவான்.

குடிக்கத் தெரியாதவன் கவிழ்த்துக் கொட்டினானாம். 8565


குடிக்கா விட்டால் கொட்டிக் கவிழ்,

(குடிக்கத் தெரியாவிட்டால்.)

குடிப்பது எருமை மூத்திரம்; கடித்துக் கொள்வது இஞ்சிப் பச்சடி.

குடிக்கிறது காடி நீர்; அதற்குத் தங்க வட்டிலா?

குடிக்கிறது கூழ்; இருக்கிறது சிங்காசனம்.

குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர். 8570

(குடிக்கிறது நீர் )


குடிக்கிறது பழங் கஞ்சி; கொப்புளிக்கிறது பன்னீர்.

குடிக்கிறது வெந்நீர்; கொப்புளிப்பது பன்னீர்.

குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?

குடிக்கிற முலையும் சரி, பிடிக்கிற முலையும் சரியா?

(ஒன்றுதானா?)

குடிக்கிறவன் கையைச் சுற்றிச் சூடு போட்டாலும் குடியை விடான். 8575


குடிக்கிற வீடு விடியுமா?

குடிக்குச் சகுனியும் கொல்லைக்குப் பல்லியும் கூடா.

குடிகாரன் புத்தி விடிந்தால் தெரியும்.

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு.

(பொழுது விடிந்தால்.)

குடிகாரன் வீட்டில் விடிய விடியச் சண்டை. 8580


குடி கெடுத்த குஷியிலே குரங்கைக் கட்டிக்கொண்டு அழுதானாம்.

குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

குடித்த மருந்து குடித்தாற் போல எடுத்தால் பரிகாரி வாயிலே மண்ணுதான்.

(பரிகாரி. வைத்தியன்.)

குடித்த மறி கூட்டில் கிடைக்காது.