பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

135



(கூழைச்சிக்கு இரண்டு கொழுக்கட்டையே.)

குதிரை இருப்பு அறியும்; கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

(கொண்டவன் குணம் அறிவாள் பெண்டாட்டி.)

குதிரை இல்லாத ஊருக்குக் கழுதை தம்பிரான். 8680


குதிரை உதைத்தாலும் உதைக்கலாம்; கழுதையா உதைக்கிறது?

(கழுதை உதைக்கலாமா?)

குதிரை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

குதிரை ஏற அதிருஷ்டம் இருந்தால் கொண்டு ஏற வேண்டுமா?

(குண்டை ஏறவேண்டுமா?)

குதிரை ஏறாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.

குதிரை ஏறி என்ன? கோணல் கொம்பு ஊதி என்ன?

வீணர்க்கும் கீர்த்திக்கும் வெகு தூரம். 8685


குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம் என்கிறான்.

(குர்ரம்- குதிரை: தெலுங்கு.)

குதிரைக்குக் குளம்பு கொடுத்தவன் கொம்பு கொடுக்கவில்லை.

குதிரைக்குக் கொம்பு முளைத்தாலும் நாய்க்கு வால் நிமிராது.

குதிரைக் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

குதிரைக்குப் படை கட்டினாற் போல. 8690

(பட்டை.)


குதிரைக்கும் நாய்க்கும் குடி போகச் சந்தோஷம்.

குதிரைக்கு வால் இருந்தால் குண்டி மட்டும்.

குதிரைக் கொம்பு

(+ ஆகிவிட்டது.)

குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்ததாம்.

குதிரை குட்டி போடுகிறது, குட்டி போடுகிறது என்று லத்தி போட்டதாம். 8695

(ஆனை குட்டி போடுகிறது.)


குதிரை குருடாக இருந்தாலும் கொள்ளுத் தின்கிறதில் குறைச்சல் இல்லை.

(தின்னும் கொள் முக்குறுணி.)

குதிரை குருடாக இருந்தாலும் நித்திரையிலே குறை இல்லை.

குதிரை செத்ததும் அல்லாமல் குழி தோண்ட மூன்று பணம்.

(பத்துப் பணம்.)