பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

137


குதிரை வால் படைத்தால் தன் மட்டும் வீசுகிறது.

குதிரை வால் வீச்சுக் குதிரை மட்டும். 8720


குதிரை விற்ற குச்சிலியன் போல.

குந்திக் கொண்டு தின்றால் குன்றும் கரையும்.

(குந்தியிருத்து.)

குந்தினால் எழுந்திருக்க மாட்டேன்; குஞ்சு பொரித்தால் பேர் பாதி.

குந்தினாயே குரங்கே, உன் சந்தடி அடங்கே.

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றானாம். 8725


குப்புற விழுந்து தவம் செய்தாலும் குருக்களுக்கு மோட்சம் இல்லை.

குப்புற விழுந்தும் முதுகில் மண் படவில்லை என்றானாம்.

குப்பையில்லா வேளாண்மை சப்பை.

(இல்லாப் பயிர்.)

குப்பையின்றிப் பயிர் விளையாது.

குப்பை உயர்ந்தது; கோபுரம் தாழ்ந்தது. 8730


குப்பை உயர்ந்தால் குடி உயரும்.

(குப்பை உயர.)

குப்பை உயர்ந்தால் கோபுரம் ஆகுமா?

குப்பை உயர்ந்து என்ன? கோபுரம் தாழ்ந்து என்ன?

குப்பை ஏறிக் குடை பிடிக்க மாட்டாதவன் வானம் ஏறி வைகுந்தம் பார்த்தானாம்.

குப்பை ஏறிக் கூவாத கோழி, கோபுரம் ஏறி வைகுண்டம் காட்டுமா? 8735


குப்பை ஏறிக் கோணற் சுரைக்காய் அறுக்காதவன் வானில் ஏறி வைகுண்டம் பார்த்தானாம்.

குப்பைக் கீரை.

குப்பைக் கீரைத் தண்டு கப்பலுக்குப் பாய்மரம் ஆகுமா?

(காலாகுமா?)

குப்பைக்குள் இருந்தாலும் குன்றிமணி குன்றாது. குப்பை கொட்ட முடியாது. 8740


குப்பை சீக்கும் நாயே, உனக்குக் கொற்றத் தவிசும் உண்டோ?

குப்பைத் தொட்டி நாய் எருக்கிடங்கு நாயை ஏளனம் செய்ததாம்.