பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தமிழ்ப் பழமொழிகள்



குப்பைத் தொட்டியாய் இருந்தாலும் நாய்க்குத் தன் தொட்டி பொன் தொட்டியே.

குப்பை நாய்க்குச் சுவர்க்க ஞாபகம்.

குப்பை மேட்டில் இருக்கும் நாய் பூர்வோத்தரங்களை எண்ணியது போல. 8745


குப்பை மேடு உயர்ந்தது: கோபுரம் தாழ்ந்தது.

குப்பையில் இருந்தாலும் குன்றிமணி; செப்பிலே இருந்தாலும் மாணிக்கம்.

குப்பையில் கிடந்தாலும் குன்றிமணி நிறம் மாறாது.

(கிடந்த குன்றிமணி போல, நிறம் குன்றாது, மாறாது.)

குப்பையில் கிடந்தாலும் மாணிக்கம் மாணிக்கந்தான்.

(இருந்தாலும்.)

குப்பையில் கீரை முளைத்தால் கப்பலுக்குக் கால் ஆகுமா? 8750


குப்பையில் கோடி தனம்.

குப்பையில் புதைத்தாலும் குன்றிமணியின் நிறம் மாறாது.

குப்பையில் போட்டாலும் குன்றிமணி குண்றிமணிதான்.

குப்பையில் போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து விட்டுப் போடு.

(செட்டி நாட்டு வழக்கு.)

குப்பையில் முளைத்த கீரை கப்பலுக்குக் கால் ஆகுமா? 8755


குப்பையில் முளைத்த கொடி கூரையில் ஏறினது போல.

(ஏதும்.)

குப்பையும் கோழியும் போலக் குருவும் சீடனும்.

குபேரப் பட்டணம் கொள்ளை போகிறதா?

குபேரன் பட்டணத்தில் கொள்ளை போயிற்றாம்; ஒருவனுக்கு ஊசி கிடைத்ததாம்.

குபேரன் பட்டணத்திலும் கோவணாண்டி உண்டு, 8760


குபேரன் பட்டணத்திலும் விறகு சுமக்கிறவன் உண்டு.

(பதியிலும் விறகு தலையன்.)

குபேரன் பட்டணம் கொள்ளை போனாலும் கொடுத்து வையாத பாவிக்கு ஒன்றும் இல்லை.

கும்பகோணத்தில் காவேரி தாண்டக் கொட்டையூரில் கச்சம் கட்டினானாம்.

கும்பகோணத்தில் மூட்டையைத் தூக்கக் குத்தாலத்தில் முண்டாசு கட்டினானாம்.