பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

139



கும்பகோணத்துக்கு வழி என்ன என்றால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம். 8765


கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டு போகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டம் கொடுத்தான்,

கும்பகோணம் கோபுரத் தழகு, தஞ்சாவூர் தடி அழகு.

கும்பகோணம் கோயில் அழகு.

கும்பகோணே க்ரதம்பாபம் கும்பகோணே விநக்யதி.

கும்பகோனே க்ரதம்பாபம், கொட்டையூரே விநக்யதி: கொட்டையூரே க்ரதம்பாபம் கும்பகோணே விநக்யதி. 8770


கும்பத்தில் மழை பெய்தால் குப்பை மேடு எல்லாம் நெல்.

கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.

கும்பலிலே கோவிந்தா போடுகிறான்.

கும்பி கூழுக்கு அழுகிறது; கொண்டை பூவுக்கு அழுகிறது.

(எண்ணெய்க்கு.)

கும்பிட்ட கையை வெட்டியது போல. 8775


கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல.

கும்பிட்ட தெய்வம் குல தெய்வம்.

கும்பிட்டுக் கடன் கொடாதே; கும்பிட்டுக் கடன் வாங்காதே.

(கும்பிட்டு.)

கும்பிட்டுக் கடன் வாங்குகிறதா?

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல. 8780


கும்பிடுகிறவனைத் தான் கேட்குமாம் கோழிக் குஞ்சுக் காவு.

கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

(வாங்க வேண்டும்.)

கும்பிடு போட்டுக் குடியைக் கெடுக்காதே.

கும்பிடும் கள்ளர், குழைந்திடும் கள்ளர்.

கும்பியிலே கல்லை விட்டு எறிந்தால் கூடத் தெறிக்கும். 8785


(மேலே தெறிக்கும்.)

கும்பினிக் கோழி முட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்.

(கும்பினி- ஈஸ்ட் இந்தியா கம்பெனி.)

குமர் முற்றிக் குரங்காகிறது.

(யாழ்ப்பாண வழக்கு.)

குமரிக்கு ஒரு பிள்ளை; கோடிக்கு ஒரு வெள்ளை.