பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ்ப் பழமொழிகள்



குமரிக்குக் கொண்டாட்டம்; கிழவனுக்குத் திண்டாட்டம்.

குமரிக்கும் நாய்க்கும் குடிபோகக் கொண்டாட்டம். 8790


குமரிக்கு முதுகில் பிள்ளை.

குமரிக்குள்ள தளுக்கு, குட்டி போட்டால் லொடக்கு.

குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.

(தனி வழி.)

குமரிப் பால் குமட்டுமா?

குமரிப் பெண்ணைத் தாசி வீட்டில் அடகு வைத்தது போல. 8795


குமரியாக இருக்கையில் கொண்டாட்டம்; கிழவியாக இருக்கையில் திண்டாட்டம்.

குமரியைக் கொண்டவனை விட்டுக் கூட வந்தவனோடு கூட்டி அனுப்புவது போல.

குமரீசுவரே, குமரீசுவரரே, கொட்டு மேளம் முழங்குவதேன்? அக்கினீசுவரரே, அக்கினீசுவரரே அவரவர் தலைவிதி.

(குமரீசுவரர்-மோகனூர்ச் சிவபெருமான் - அக்கினீசுவரர் நெரூர்ச் சிவபெருமான்,)

குயத்தி நாக்கை அறுத்தாலும் குண்டு சட்டி இரண்டு காசுதான் என்பாள்.

குயத்தி நாக்கைக் குட்டம் போட்டாலும் குடம் மூன்று காசுதான் என்பாள். 8800


குயவன் வீட்டில் பானை இருந்தால் வர மாட்டார்களா? பெண் இருந்தால் கேட்க மாட்டார்களா?

குயவனில் தாதன் இல்லை; ஆயரில் ஆண்டி இல்லை.

குயவனுக்கு ஆறு மாதம்; தடிகாரனுக்கு அரை நாழிகை.

(குயவனுக்கு ஒரு நாள்.)

குயவனுக்கு ஒரு மாச வேலை; தடியனுக்கு ஒரு நாழிகை வேலை.

குயவனுக்குப் பல நாள் வேலை; தடியடிக்காரனுக்கு ஒரு நாள் வேலை. 8805


(அரை நாழிகை வேலை.)

குயவன் கலசம் கொண்டு வா, இடையா பால் கொடு என்றாற் போல.

குயில் குரலும் மயில் அழகும் போல.

குயில் கூவிக் கெடுகிறதாம்; மயில் ஆடிக் கெடுகிறதாம்.

குயில் கூவினாற் போல.