பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

141


குயில் போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல் ஒரு வைப்பாட்டி வேணும். 8810


குயில் முட்டை இடக் காகம் கண்டு களிக்க.

குயிலைப் போலக் கூவுகிறான்.

குரங்காட்டிக்கு அவன் குரங்குதான் பெரிது.

குரங்கின் கைக் கொள்ளி கொடுத்து விடல்.

(பழமொழி நானுாறு.)

குரங்கின் கைப் பூமாலை. 8815


குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்டது.

(கோடுக்கலாமா?)

குரங்கின் கையில் சிக்கிய பாம்பு போல.

குரங்கின் தலையில் கரகம் வைத்துக் காளி கும்பிட்டது போல

குரங்கின் மலத்தை மருந்துக்குக் கேட்டால் சொப்புக்களையெல்லாம் தத்திப் பாயும்.

குரங்கின் மூத்திரம் துளி ஆயிரம் பொன். 8820


குரங்கின் வயிற்றில் குஞ்சரம் பிறக்குமா?

குரங்கின் வாயில் அடக்கம் போட்டாற் போல.

குரங்கினிடம் பேன் அகப்பட்டாற் போல.

குரங்கினுள் நன் முகத்த இல்.

(பழமொழி நானூறு.)

குரங்கு ஆடினாலும் ஆடாவிட்டாலும் குரங்காட்டி ஆடுவான். 8825


குரங்கு ஆனாலும் குலத்திலே கொள்ள வேண்டும்.

குரங்கு உடம்பில் புண் வந்தால் கோவிந்தாதான்.

குரங்கு எல்லாம் கூட்டம் கூட்டமாக இருக்கும்.

குரங்கு எறி விளங்காய்.

குரங்கு என்றாலும் குலத்திலே கொள். 8830


குரங்கு ஏறாத கொம்பு உண்டோ?

குரங்கு ஓடம் கவிழ்த்த கதை ஆகி விட்டது.

குரங்குக்கு ஏணி வைத்துக் கொடுத்தது போல.

குரங்குக்குக் கள் வார்த்தாற் போல.

குரங்குக்குக் குல்லாய் போட்டு அழகு பார்த்ததுபோல. 8835