பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தமிழ்ப் பழமொழிகள்


குரங்குக்குச் சாவு சிரங்கிலே,

குரங்குக் குட்டிக்குத் தாவக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?

குரங்குக் குட்டிக்கு மரம் ஏறக் கற்றுக் கொடுத்தானாம்.

குரங்குக் குட்டி கையைத் தேய்க்கிறது போல.

குரங்குக்குத் தன் மனம் நறுமணமாம். 8840


குரங்குக்குத் தேள் கொட்டினாற் போல.

குரங்குக்குத் தேள் கொட்டினால் மரத்துக்கு மரம் தாவுமாம்.

குரங்குக்குப் பிய்க்கத் தெரியும்; கட்டத் தெரியாது.

குரங்குக்குப் புண் வந்த கதை.

குரங்குக்குப் புண் வந்தால் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இருக்குமாம். 8845


குரங்குக்குப் புத்தி சொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு அறுந்தது.

(தன் கூண்டை இழந்தது.)

குரங்குக்குப் புத்தி சொன்னால் குடியிருப்புப் பாழ்தான்.

குரங்குக்குப் பொரி போட்டுத் தடி வெட்டிக் கொடுத்தது போல.

குரங்குக்கும் தன் குட்டி பொன் குட்டி.

குரங்குக்கு வால் வைப்பதற்குள் விடிந்து விட்டது. 8850


குரங்கு கள்ளும் குடித்துப் பேயும் பிடித்துத் தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்?

குரங்கு காது அறுத்தாலும் அறுக்கும்; பேன் எடுத்தாலும் எடுக்கும்.

குரங்கு கால் பணம்; விலங்கு முக்காற் பணம்.

குரங்கு குட்டி கையை நெருப்பில் தோய்க்கிறது போல,

குரங்கு கைப் பூனை போல. 8855


குரங்கு கையில் குட்டிக்குக் கள் வார்த்தாற் போல.

குரங்கு கையில் கொடுத்த கொள்ளி போல,

(கொள்ளி அகப்பட்ட கதை.)

குரங்கு கையில் பூமாலை அகப்பட்டது போல.

குரங்குச் சேஷ்டை.

குரங்கு சாகக் கொடுத்த ஆண்டி போல. 8860


குரங்கு செத்த குறவன்.

(மலையாள வழக்கு.)

குரங்கு செய்கிற தொல்லை அப்பப்பா, அது செத்தால் சமாதி கட்ட வேணும்.