பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

143


குரங்கு சொறிந்தால் புண் ஆகும்.

குரங்கு தன் அழகைப் பார்க்கக் கண்ணாடி தேடியதாம்.

குரங்கு தன் குட்டியின் கையைக் கொண்டு பதம் பார்க்கிறது போல. 8865

(அடுப்பின் தீயைச் சோதித்தது போல.)


குரங்கு தாவுகிற தாவிலே குட்டியை மறக்குமா?

குரங்கு தீவட்டி பிடித்தாற் போல.

குரங்கு நியாயம்.

குரங்குப் பிடி, கரும்புப் பிடி.

குரங்குப் பிடிபோல் பிடிக்க வேண்டும். 8870

(குரங்குப் பிடியாய்ப் பிடிக்கிறது.)


குரங்குப் பிடி போன்ற பிடிவாதம் பிடிக்காதே.

குரங்குப் பிடியும் குழந்தைப் பிடியும்.

குரங்குப் பிணமும் குறப்பிணமும் கண்டவர் இல்லை.

(குறவன் சுடுகாடும்.)

குரங்குப் பீயை மருந்துக்குக் கேட்டால் கொம்புக்குக் கொம்பு தாவுமாம்.

குரங்குப் புண் ஆறாது. 8875

(பிரம்மாண்டம்.)


குரங்குப் புத்தி.

குரங்கு பிடித்த பிடியை விடாது; நாய் கடித்த கடியை விடாது.

குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்; காதைப் பிய்த்தாலும் பிய்க்கும்.

குரங்கும் உடும்பும் பிடித்தது விடா.

குரங்கு மரத்தில் ஏறும்; குழந்தை இடுப்பில் ஏறும். 8880


குரங்கு மழையில் நனைந்தாலும் நனையும்; குடிசையில் போய் ஒண்டாது.

குரங்கு முகத்துக்குப் பொட்டு எதற்கு?

குரங்கு முகம் எல்லாம் ஒரு முகம்; கூத்தாடி பேச்செல்லாம் ஒரு பேச்சு.

குரங்கு வாழைப்பழத்தை கண்டால் சும்மா விடுமா?

குரங்கு விழுந்தால் கூட்டத்துடன் சேராது. 8885