பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

145


குருட்டுக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.

குருட்டுக் கொக்குக்கு ஊர்க்குளமே சாட்சி.

குருட்டுக் கோழி தவிட்டுக்கு வீங்கினது போல்.

குருட்டு நாய்க்கு அதிருஷ்டம் வந்த மாதிரி.

குருட்டு நாய்க்கு இருட்டுள் வறட்டுப் பீ அகப்பட்டாற் போல. 8915


குருட்டு நாய்க்குத் திருட்டுப் புத்தி எதற்கு?

குருட்டு நாய்க்கு வறட்டு மலம் கிடைத்தது போல.

குருட்டுப் பூனை விட்டத்தில் தாவினாற் போல,

குருட்டுப் பெண்ணுக்கு வறட்டு ஜம்பம், குருட்டு மாட்டைத் தெய்வம் காக்கும். 8920


குருடர்கள் ஊரிலே ஒற்றைக் கண்ணன் ராஜா.

குருடன் கூடி ஆனையைக் கண்ட கதை.

குருடன் அளந்ததும் கோணியில் கொண்டதும் போல.

குருடன் ஆடு மேய்க்க எட்டு ஆளுக்கு வேலையா?

குருடன் ஆனையைப் பார்த்தாற் போல. 8925


குருடன் கூட வழி போனாலும் செவிடன் கூடப் போகக் கூடாது.

குருடன் கூத்துப் பார்க்கப் போனால் பயன் என்ன?

(பார்த்தது போல.)

குருடன் கைக் கோலைப் பிடுங்கினாற் போல.

குருடன் கையில் விலாங்கு அகப்பட்டது போல.

(விலாங்கு-ஒருவகை மீன்.)

குருடன் சந்தைக்குப் போக எட்டாள் மெனக்கிடு. 8930

(வினைக் கேடு.)


குருடன் தண்ணீருக்குப் போனால் பின்னோடு எட்டாள் மெனக்கீடு.

குருடன் தூங்குவதும் ஒன்றுதான்; விழித்திருப்பது ஒன்றுதான்.

குருடன் பரத நாட்டியம் ஆடினது போல.

குருடன் பழுதை திரித்தது போல.

குருடன் பெண்டாட்டி கூனனோடு உறவாடினாள். 8935


குருடன் பெண்டிரை அடித்தாற் போல.

குருடன் மாங்காய் எறிந்தாற் போல.

குருடன் ராஜ விழி விழித்தாற் போல,

(விழித்த கதை.)