பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ்ப் பழமொழிகள்


ஒருவர் கூறை எழுவர் உடுக்க.

ஒருவர் துணியை இருவர் உடுத்தினால் இருவரும் அம்மணமாம் 6030

(நிர்வாணம்.)

ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்.

(ஆழ்வார்கள் கூற்று).

ஒருவர் பொறை, இருவர் நட்பு.

ஒருவராய்ப் பிறந்தால் நன்மை: இருவராய்ப் பிறந்தால் பகைமை,

ஒருவருக்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும்.

ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன். 6035

ஒருவரும் அறியாத உச்சித ராமன்,

ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.

ஒருவன் அறிந்தால் ரகசியம் இருவர் அறிந்தால் அம்பலம்.

ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையில் கல்லைப் போடுகிறதா?

(மண்ணை அள்ளிப் போடுகிறதா?)

ஒருவன் செய்த தீமை அவன் காலைச் சுற்றி வேரை அறுக்கும். 6040

ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?

ஒருவன் துணையாக மாட்டான்; ஒரு மரம் தோப்பாக மாட்டாது.

ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா? ஒன்றி மரம் தோப்பாமா?

(பிறப்பா? தோப்பா?)

ஒருவனுக்கு இருவர் துணை. 6045

ஒருவனுக்குத் தாரம்; மற்றவனுக்குத் தாய்.

(ஒருவனுடைய தாரம்.)

ஒருவனேனும் உயிருடன் உளனோ?

ஒருவனை அறிய இருவர் வேண்டும்.

ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்; பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்.

ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். 6050