பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

161


அறுத்து வெளியிலே நிற்கிறேன்.

(வீணுக்கு.)

கூலிக்கு உழைக்கிறவனுக்கு ஆனைத் தாலியா?

கூலிக்குக் கழு ஏறுவார்களா?

(ஏற்பார்களா?)

கூலிக்குக் குத்துகிறவளைக் கேளிக்கை ஆடச் சொல்வது போல். 9280


கூலிக்குக் குத்துவாள் பிள்ளைக் குத்தவிடு பஞ்சமா?

கூலிக்கு தாலி அறுப்பாரும் இல்லை; மேலைக்கு இருப்பாரும் இல்லை.

கூலிக்கு நாற்று நட வந்தவனுக்கு எல்லைக்கு வழக்கோ?

கூலிக்கு நெல் குத்தலாமாம்; கைமூலம் தெரியக் கூடாதாம்.

கூலிக்குப் பாவம் குறுக்கே. 9285

(வந்தது. பாவி குறுக்கே வந்தான்.)


கூலிக்குப் போனாலும் குறுணி நெல் கிடைக்கும்.

கூலிக்கு மார் அடிப்பது.

கூலிக்கே குத்துவதானாலும் கமுக்கட்டு மயிர் தெரியாமல் இருக்குமா?

கூலி குறைத்தாயோ? குறை மரக்கால் இட்டாயோ?

கூலி குறைத்தால் வேலை கெடும். 9290


கூலிப் படை குத்துமா? கூவத்தைக் கண்டு கடல் ஒத்துமா?

கூலிப் படைவெட்டுமா?

கூலியும் கொடுத்து எதிர் மூச்சும் போட்டாளாம்.

(போடுகிறது.)

கூலியைக் குறைக்காதே; வேலையைக் கெடுக்காதே.

கூவுகிற கோழிக்கும் குந்திக் கொண்டு இருக்கிற அம்மையாருக்கும் என்ன வேலை? 9295


கூழ் ஆனாலும் குப்பை ஆனாலும் குடித்துக் கொண்டவன் பிழைப்பான்.

கூழ் ஆனாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு.

கூழ் என்றாலும் குடிக்கிறவன் பிழைப்பான்.

கூழ் என்றாலும் வாழ்வுக்குத் தக்கதாகக் குடிக்கத்தான் வேண்டும்.

(வாழ்வுக்குத் தக்கதென்றால்.)

கூழ் குடிக்காத பொட்டை, கேழ்வரகு ஏண்டா நட்டாய்? 9300