பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கெ


கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது. கெஞ்சும் புத்தி கேவலம் கொடுக்கும். 9335

கெஞ்சு மணியம் பண்ணுகிறது,

(கெஞ்சி பண்ணுகிறதா?)

கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும். கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை. கெட்ட கழுதைக்குத் துஷ்ட புத்தி. கெட்ட கழுதைக்குப் பட்டது கண்டது. 9340

கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்று மீனை எடுத்து விழுங்கினது போல. கெட்ட காலத்துக்கு விபரீத புத்தி.

(விநோத புத்தி.)

கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை. கெட்ட குடி கட்டி வருமா? 9345

கெட்ட குடி கெட்டது; பூராவாய்க் குடி அப்பா! கெட்ட குடி கெட்டாலும் வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கிவிடு: (கெட்ட குடி கெட்டது.) கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும். கெட்ட கேட்டுக்குக் கொட்டு ஒன்று, முழக்கு ஒன்றா? கெட்ட கேட்டுக்குக் கெண்டை போட்ட முண்டாசு குறைச்சலா? 9350

(கொண்டை போட்ட.)

கெட்ட கேட்டுக்கு நெட்டை ஆள் கூலியா?

(இரட்டையாள்.)

கெட்ட கேட்டுக்குப் பட்டுப் பீதாம்பரம்! கெட்ட கேட்டுக்குப் பிச்சைக் குடுவை இரண்டாம்.