பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

165


கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணம்.

கெட்டது கிழவன் குடித்தனம். 9355


கெட்டது கெட்டாய் மகளே, கிட்ட வந்து படுத்துக் கொள்.

கெட்டது பட்டது கிருஷ்ணாங்குளம்; அதிலும் கெட்டது அத்திப்பட்டான் குளம்.

(கிருஷ்ணாம்பேட்டை, ஆனைக்குளம்.)

கெட்டதும் கிழிந்ததும் பெற்றான் கோனான் நாட்டிலே.

கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.

கெட்டதைக் கேனத்தில் தேடு. 9360

(கேனம்.கேனோப நிஷத்.)


கெட்ட நாய்க்குப் பட்டது அரிது.

(பட்டது உறுதி.)

கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.

(பட்டது லாபம்.)

கெட்ட நாய்க்குப் பட்டதே சரி.

கெட்ட பயலுக்கு ஏற்ற துஷ்டச் சிறுக்கி.

கெட்ட பால் நல்ல பால் ஆகுமா? 9365


கெட்ட பெயர் ஒரு போதும் மறையாது.

கெட்ட பேருக்கு எட்டு வார்த்தை.

கெட்ட மாடு தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.

(தேடுகிறதும், கொடுக்கிறதும்.)

கெட்ட மாட்டைத் தேடும் முன்னம் எட்டு மாடு கட்டலாம்.

(தேடலாம்; சம்பாதிக்கலாம்.)

கெட்ட மார்க்கத்தில் இருக்கும் ஒருவன் மற்றவர்களையும் இழுத்துக் கொள்வான். 9370


கெட்டவள் கெட்டாள் மகளே, கிட்ட வா.

கெட்டவள் கங்கை ஆடினால் பாவம் தீருமா?

(போகுமா?)

கெட்டவள் பட்டணம் சேர்வாள்.

கெட்டவன் வாழ்ந்தால் கிளை கிளையாய்த் தளிர்ப்பான்; வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.

கெட்டவனுக்கு எத்தனை படிப்பித்தாலும் துஷ்டத்தனம் விடான். 9375