பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

15


ஒரு விரல் நொடி இடாது.

ஒரு விரல் முடி இடாது.

ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது.

ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்,

ஒரு வீடு அடங்கலும் பிடாரி. 6055

(பஜாரி.)

ஒரு வேலைக்கு இரு வேலை.

(புத்தி கெட்டவன் வேலை.)

ஒரு வேலைக்கு இரு வேலை, ஓதி வைத்தார் வாத்தியார்.

(பண்டாரம்.) .

ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி.

ஒரே காலில் நிற்கிறான்.

(இருக்கிறான்.)

ஒரே துறையில் குளித்த உறவு. 6060

ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம்.

ஒலி இருந்த சட்டி, இன்ன சட்டி என்று தெரியாது.

ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு.

ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.

ஒவ்வொரு நாய்க்கும் அதன் நாள் உண்டு. 6065

ஒவ்வொருவனும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்கவேண்டும்.

ஒவ்வொன்றாய் நூறா?.ஒரேயடியாய் நூறா?

ஒழிந்த இடம் பார்க்கிறதா?

ஒழிந்த இடமும் தாவாரமும் தேடுகிறதா?

ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை. 6070

(பழமொழி நானுறு.)

ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று,

(உயர்குலம்)

ஒழுக்கிலே முக்காடா?

ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.