பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ்ப் பழமொழிகள்

 ஒழுக்குக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல.

(ஒழுக்கு வீட்டிலே.)

ஒழுகாத வீடு உள்ளங்கையத்தனை போதும். 6075

ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம்.

ஒழுங்கு ஒரு பணம்; சளுக்கு முக்காற் பணம்.

(சழக்கு.)

ஒழுங்கு கணக்கப்பிள்ளை; இடுப்பு இறக்கவில்லை.

ஒள்ளியர் தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.

ஒளி இல்லா விட்டால் இருளையும் இருள் இல்லா விட்டால் ஒளியையும் காணலாம். 6080

ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டில் ஒளித்துக்கொண்டானாம்.

(யாழ்ப்பாண வழக்கு.)

ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?

ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல்.

(வீட்டிலா ஒளிப்பது?)

ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?

ஒளிகிற சேவகனுக்கு மீசை எதற்கு? 6085

ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும்.

ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

(குடும்பம். ஒரு சேரக் கெடும்.)

ஒற்றுமையே வலிமை.

ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.

ஒற்றைக் காலில் நிற்கிறான். 6090

ஒற்றைக் காலும் ஓரியுமாய்ச் சம்சாரம் செய்கிறான்.

ஒற்றைப் பாக்கு எடுத்தால் உறவு முறியும்.

ஒன்றரைக் கண்ணன் ஓரைக் கண்ணனைப் பழித்தானாம்.

ஒன்றாம் குறைவு வண்ணான் கழுதைக்கு.

ஒன்றால் ஒன்று குறைவு இல்லை; முன்னாலே கட்டத் துணி இல்லை. 6095