பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

17

 ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்த தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.

ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கச்சே, மூலை வீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம்.

(குங்கிலியத்துக்கு அழுததாம்.)

ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க ஹனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.

ஒன்றான தெய்வம் ஒதுங்கி நிற்கிறதாம்; சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.

ஒன்றான பிரபு உறங்கிக் கிடக்கையில் பிச்சைக்கு வந்தவன் ததியோதனத்துக்கு அழுகிறானாம். 6100

ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை.

ஒன்று ஒன்றாய் நூறோ? ஒருமிக்க நூறோ?

ஒன்றுக்கு இரண்டாம் வாணிபம் இல்லை.

ஒன்றுக்கு இரண்டு: உபத்திரவத்துக்கு மூன்று.

ஒன்றுக்குப் பத்து; உரைக்குப் பதினாறு.

ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு. 6105

ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை.

ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும்.

ஒன்றுக்கு வாங்கி எட்டுக்கு விற்றால் லாபம்.

ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை.

ஒன்று குறைந்தது கார்த்திகை: ஒக்கப் பிறந்தது மார்கழி. 6110

(ஒக்கப் பிறந்தது சங்கராந்தி.)

ஒன்று செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும்.

ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.

ஒன்று நினைக்க ஒன்று ஆயிற்று.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

(பாரதியார்.)

ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா? 6115

ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து நாள் சடங்கு.