பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோ


கோகுலாஷ்டமிக்கும் குலாம் காதருக்கும் என்ன சம்பந்தம்?

கோட்டாறு சேவியர் கேட்டவரம் தருவார். 9900


கோட்டானை மடியிற் கட்டிக் கொண்டது போல.

(கட்டிக் கொண்டு சகுனம் பார்த்தது போல.)

கோட்டி என்றால் கோபம் சண்டாளம்.

கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.

கோட்டைக்குள் எலியை வைத்துக் கட்டியது போல.

கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டுமா? 9905


கோட்டைக்குள்ளே படை வெட்டிக் கொள்கிறதா?

கோட்டையில் குண்டு போடுவான், கோயிலில் குண்டு போடுவானா?

கோட்டையில் பெண் பிறந்தாலும் போட்ட எழுத்துப் போகுமா?

(போட்ட சுழி:போட்ட புள்ளி.)

கோடாலிக் காம்பினால் குலத்திற்குக் கேடு வரும்.

கோடாலிக் காம்பு குடித்தனத்துக்கு ஆகாது. 9910


(குலத்துக்கு ஈனம்.)

கோடாலிக்காரனுக்குப் பிளவை புறப்பட்டது போல.

கோடானுகோடி வினை வரினும் மனம் கோணாமல் இருப்பதே கோடி பெறும்.

கோடி ஒரு வெள்ளை, குமரி ஒரு பிள்ளை.

கோடிக்கும் வேதைக்கும் காதம்; வேதைக்கும் கள்ளிக்கும் காதம்; கள்ளிக்கும் பூண்டிக்கும் காதம்; பூண்டிக்கும் நாகைக்கும் காதம்; நாகைக்கும் காரைக்கும் காதம்.

(கோடி. கோடிக்கரை வேதை. வேதாரண்யம், கள்ளி.கள்ளி மேடு, பூண்டி-திருப்பூண்டி. இப்படியே காசிவரைக்கும் உண்டு என்பர்.)

கோடி கப்பல் நஷ்டம் கொட்டை நூற்றா விடியும்? 9915

(கப்பல் ஓடிய வீடு.)