பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

தமிழ்ப் பழமொழிகள்


ஒன்றும் அறியாத கன்னி, அவளைப் பிடித்தது சனி.

ஒன்றும் அறியாளாம் கன்னி, ஓடிப் பிடித்ததாம் ஆறு மாத ஜன்னி.

(அவளைப் பிடித்ததாம்.)

ஒன்றும் இல்லாத தங்கைக்கு ஒன்பது நாள் சடங்காம்.

ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம். 6120

ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை.

(ஒன்றரை முழத் தோசை.)

ஒன்றும் இல்லாவிட்டால் அத்தை மகள் இருக்கிறாள்.

ஒன்றும் இல்லை என்று ஊதினான்; அதுதானும் இல்லை என்று கொட்டினான்.

ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணு, பானை தின்னுவாள் பன்றிக் கறி.

ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். 6125

ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை.

ஒன்றே ஆயினும் நன்றாய் அறி.

ஒன்றே குதிரை; ஒருவனே ராவுத்தன்.

ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்.

(திருமந்திரம் )

ஒன்றே செய்க, இன்றே செய்க, இன்னே செய்க. 6130

(கபிலர் அகவல்.)

ஒன்றே செயினும் நன்றே செய்.

ஒன்றே பிறப்பு, ஒன்றே சிறப்பு.

ஒன்றே ராசா, ஒன்றே குதிரை.

ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.

ஒன்றைப் பத்தாக்கு. 6135

ஒன்றைப் பத்தாகவும், பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான்.

ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும்.

ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும்.

ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.

ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு. 6140