பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

199

கோள் சொல்லிக் குடும்பத்தைக் கெடுத்தாலும் குடிவரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.

கோள் சொல்லிக் குண்டுணி.

(குண்டுப் பெருமாள்.)

கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

கோளாற்றக் கொள்ளாக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்.

கோளாறு இல்லாத செட்டி கோவணத்தை அவிழ்ப்பானா? 10115


கோளுக்கு முந்தேன்; கூழுக்குப் பிந்தேன்.

(உணவுக்கு)

கோளும் குறளையும் குலத்துக்கு ஈனம்.

கோளும் சொல்லிக் கும்பிடுவானேன்?

கோனான் கோல் எடுக்க நூறு ஆடும் ஆறு ஆடு ஆயின.

கோஷ்டியூர் காணாதவர் குரங்காய்ப் பிறப்பார். 10120