பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழ்ப் பழமொழிகள்


சங்கூதிப் பண்டாரம், அங்கு ஊதி இங்கு வராதே, இங்கு ஊதி அங்கே போ.

(பூஜை பண்ணும் பண்டாரத்தைப் பார்த்துச் சிவலிங்கம் சொன்னது.)

சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்?

சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை.

(சங்கோசம் இல்லையென்றால்.)

சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

(வேக வேண்டும்.)

சட்டி சுட்டது; கை விட்டது. 10180


சட்டி திருடும் நாய்க்குப் பெட்டி பணம் எதற்கு?

சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை.

சட்டி புழைக்கடையிலே; அகப்பை வாசலிலே.

சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்?

சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா? 10185


சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது.

சட்டுவம் கறிச் சுவையை அறியுமா?

சட்டைக்காரன் நாயை எட்ட நின்று பார்.

சட்டைநாதபுரம் உழவு; சீகாழி இழவு: செம்மங்குடி வறட்டி.

(எப்போதும் இருக்கும். சீகாழிக்கு 1 1/2 மைலில் உள்ளது செம்மங்குடி)

சடை கொண்ட இலுப்பையைத் தடிகொண்டு அடித்தாற்போல. 10190


சடை கொண்டு வெருட்டல் வேண்டா.

(திருவால. 16:26.)

சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்.

(சாற்றுக்கு.)

சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பரமான்னத்துக்கு அழுகிறதாம்.

சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்? .

சடையைப் பிடித்தால் சந்நியாசி தன்னாலே வருவான். 10195

(பிடித்து இழுத்தால். கிட்டே வருவான். தம்பிரான் கூட வருவார்.)


சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல்.

சண்டிக்கு ஏற்ற மிண்டன்.

(முண்டன்.)

சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி.

(நொண்டிச் சாரதி.)