பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

207


சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்ந்தாலும் சூரியனையே உலகத்தார் நாடுவார்கள்.

சந்திரன் கோயிலிலும் விளக்கு எரிகிறது.

சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்.

சந்திரன் மறைந்த பின் நிலா நிற்குமா?

சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு? 10285


சந்திரனுக்குச் சரியாக முட்டை தட்டினாளாம்.

சந்திரனுக்கும் களங்கம் உண்டு.

சந்திரனைப் பார்த்த கண்ணுக்குச் சனியனைப் பார்த்தாற் போல.

சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல.

(குரைத்து ஆவதென்ன?)

சந்தில் சிந்து பாடுகிறான். 10290


சந்திலே சமாராதனை செய்ய முடியுமா?

சந்துக்குச் சந்து சதிராட்டம்.

சந்து விட்டால் வந்து விட்டேன்.

சந்தை இரைச்சலில் குடியிருந்து கெட்டேனே!

(சந்தைக் கடையிலே.)

சந்தைக்குப் போகிறவன் வழித்துணை வாரான். 10295


சந்தைக்குப் போய் வந்த நாய் போல.

சந்தைக்கு வந்தவர்கள் வழிக்குத் துணையா?

(வழித்துணை ஆவாரா?)

சந்தைக் கூட்டம், பொம்மலாட்டம்.

(பொம்மை ஆட்டம்.)

சந்தைக் கோபாலம்; தந்தப் பல்லக்கா?

(கோபாலம்-பிச்சை.)

சந்தையில் அடித்ததற்குச் சாட்சி ஏன்? 10300


சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?

சந்தையில் கும்பிட்டால் வாழ்த்துவாரும் இல்லை; வைவாரும் இல்லை.

சந்தோஷம் சாண் பலம்.

(சகல பலம்.)

சந்தோஷ வார்த்தை சமயத்தில் வந்தது.

சந்தியாசம் சகல நாசம். 10305