பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

211


சமுத்திர ஜலம் தாகத்துக்கு உதவாது.

சமைக்கப் படைக்கத் தெரியாமல் போனாலும் உடைக்கக் கவிழ்க்கத் தெரியும்.

சமையல் தெரிந்தவனுக்கு உமையவள் உள்ளங்கையில்.

சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகன் உள்ளங்கையில்.

சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற் போல. 10390


சமையல் வீட்டிலே முயல் தானே வந்தது போல.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா ?

(என்று எழுதினால் நாக்கு ருசிக்குமா?)

சர்க்கரை தின்று பித்தம் போனால் கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?

சர்க்கரை தின்னக் கூலியா? 10395


சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்.

சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போல.

சர்க்கரைப் பாகுத் தோண்டியிலே தாழ மொண்டாலும் தித்திப்பு: மேலே மொன்டாலும் தித்திப்பு.

சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு சத்தியமா?

சர்க்கரைப் பொங்கலுக்குப் பத்தியம் இல்லை; சாண்வயிறு நிரம்பி விட்டால் வைத்தியம் இல்லை. 10400


சர்க்கரைப் பொம்மையில் எந்தப் பக்கம் தித்திப்பு?

சர்க்கரை முத்துக்குட்டி சாதம் குழைந்து போச்சு: எடுடா பல்லக்கை; பிறந்தகத்துக்குப் போகிறேன்.

(தூக்கடா பல்லக்கை.)

சர்க்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா.

சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம்.

சர்க்கரையும் மணலும் சரி ஆகுமா? 10405


சர்க்காரான் பணத்தை வெட்டியான் சுமந்தானாம்.

(சுமந்த மாதிரி.)

சர்த்திக்கும் பிள்ளை வர்த்திக்கும்.

(சர்த்திக்கும்-வாந்தி எடுக்கும். வர்த்திக்கும் - வளரும்.)

சர்ப்பத்தின் வாய்த் தவளை போல.

(தேரை போல.)

சர்வ வில்லங்க சித்தி.