பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

213


சவுடால் பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறு மட்டை

சவுண்டிக்குச் சாப்பிட்டவன் இருக்கச் செத்தது பொய்யா.

சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை.

சளி பிடித்ததோ. சனி பிடித்ததோ?

சளுக்கன் தனக்குக் சத்துரு; சவுரிக்காரனுக்கு மித்துரு. 10440


சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார்.

சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு.

சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறிதலையும் இருக்கிறது.

சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?

(எங்கே வரும்?)

சன்னம் சன்னம் பர்வதம்.

சனத்தோடு சனம் சேரும்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்.

சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்.

சனமருளோ, சாஸ்திர மருளோ?

சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது.

சனிக்கிழமையும் புதன் கிழமையும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான். 10450

(செட்டிநாட்டு வழக்கு; வேறு ஒன்றும் செய்வதில்லை என்பது கருத்து.)


சனி நீராடு.

சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும்.

சனிப் பிணம் தனிப் போகாது.

சனிப் பிணம் துணை தேடும்.

(துணை கூட்டும்.)

சனிப் பெருக்கு. 10455

(வேளாண்மைக்கு நல்லது.)


சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல.

சனியன் தொலைந்தது.

சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்.

சனியன் பிடித்தவனுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது.

(பிடித்தவளுக்கு.)

சனியனை அடிமடியில் கட்டியது போல. 10460


சனியனை விலைக்கு வாங்கினது போல.

சனியும் புதனும் தங்கும் வழி போகக் கூடாது.

சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது.

சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை: சனியைப்போலக் கெடுப்பவனும் இல்லை.

சஜ்ஜனர் உறவு சர்க்கரைப் பாகுபோல. 10465