பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
218
தமிழ்ப் பழமொழிகள்
 


சாத்திரம் கற்றவன் தானே காசு?

சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.

சாத்திரம் பார்த்தால் மூத்திரம் பெய்ய இடம் இல்லை.

சாத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்ணைக் கொடு. 10565

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம்; பார்த்த வீடு தரித்திரம்.

சாதத்துக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே தொங்குகிறதா?

சாதத்துக்குப் புனுகும் சந்தனத்துக்குப் பெருங்காயமும் போடலாமா?

சாதி அந்த புத்தி: குலம் அந்த ஆசாரம்.

சாதிக்கு அடுத்த புத்தி: தீனிக்கு அடுத்த லத்தி. 10570

சாதி அபிமானமும் சமய அபிமானமும் சந்நியாசிக்கும் உண்டு.

(போகா.)

சாதி ஒளிக்குமா? சதகுப்பை நாற்றம் போகுமா?

சாதிக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

சத்திக்குத் தக்க புத்தி; குலத்துக்குத் தக்க ஆசாரம்.

சாதிக்குத் தகுந்த புத்தி, சாப்பாட்டுத் தகுந்த லத்தி.

(தீனிக்கு.)

சாதி குணம் காட்டும்; சந்தனம் மணம் காட்டும். 10575

சாதி சாதியைக் கொள்ளும், சதகுப்பை நாற்றத்தைக் கொள்ளும்.

(சாதி சனத்தைக் கொள்ளும், வழக்கத்தைக் கொள்ளும்.)

சாதித் தொழில் விடுமா? சர்க்கரை கசக்குமா?

சாதிப் பழக்கமும் சதகுப்பை நாற்றமும் போகா.

சாதி பேதம் சண்டாளர் வேதம்.

சாதியபிமானமும் சமயாபிமானமும் சந்நியாசிக்கும் உண்டு. 10580

சாதியில் கெட்டது கிள்ளை; சாமியில் கெட்டது மாரியம்மன்; காயில் கெட்டது கத்தரிக்காய்.

சாதி வாக்கு ஜங்கிட வாக்கு: இலுப்பைப்பூத் தொளை வாக்கு.

சாது சாது என்கிற சந்நியாசிக்குத் தடிபோல ஐந்து குழந்தைகளாம்.

(சாமியாருக்கு நாலு பிள்ளைக் குழந்தைகளாம். நாலு பிள்ளை.)

சாதுப் பசுவையும், ஏழைப் பிராமணனையும் நம்பாதே.

சாதுப் பாம்பு சாகக் கடித்தது. 10585