பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

219


சாதுப் பெண்ணுக்கு ஒரு சூதுப்பிள்ளை வந்தது போல.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

(இடம் கொள்ளாது.)

சாதுரியப் பூனை தயிர் இருக்கச் சட்டியை நக்கியதாம்.

சாதுரியப் பூனை மீனை விட்டுப் புளியங்காயைத் தின்றதாம்.

சாந்துப் பெட்டி பாம்பு ஆயிற்று. 10590


சாப்பாட்டுக்கு நான்; மோதிரப் பணத்துக்கு முத்தண்ணா.

சாப்பிட்ட சோற்றுக்கு ஊறுகாய் தேடுவார்களா?

சாப்பிடுகிற அழகைப் பார். நாய் போல.

சாப்பிடும் கலம் பொன் ஆனாலும் ஊறுகாய் இல்லாமல் முடியுமா?

(ஊறுகாய் கேளாமல்.)

சாப்பிணி மருந்து ஏற்காது. 10595


சாப்பிள்ளை பெற்றவளுக்குச் சந்தோஷம் வருமா?

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சி கூலி தப்பாது.

சாப்பிள்ளை பெற்றுத் தாலாட்டவா?

சாப்பிள்ளை பெறுவதிலும் தான் சாவது நலம்.

சாபம் இட்டார் உண்டோ? தலையின் திருவெழுத்தோ? வேகவிட்டார் உண்டோ? எழுத்தின்படிதானோ? 10600


சாம் அளவும் இருந்தால் கல்யாணம் செய்து வைக்கிறேன்.

சாம்பல் மேட்டு நாய்க்குத் தன் பூர்வஜன்ம ஞாபகம்.

சாம்பலில் பண்ணின ஆருதி போலே.

சாம்பலில் புரளும்போது நாய்க்குப் பூர்வஞானம் உதயமாகும்.

சாம்பலைக் கிளறிக் கோழி தானே விலங்கிட்டுக் கொண்டது போல் 10605

(சாம்பலைக் கிண்டி.)


சாம்பலைத் தின்று வெண்ணெயைப் பூசினது போல.

சாமத்து நாய் ஊளை தெருவுக்குக் கேடு.

சாமர்த்தியர் கோழி சாமம் போலக் கூவிற்றாம்.

சாமி இல்லை என்றால் சாணியைப் பார்: மருந்து இல்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் நேர்வாளத்தைப் பார்.

சாமி கை காட்டும்; எடுத்து ஊட்டுமா? 10610