பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
221
 


சாலோடு முழவைத் தட்டு.

சாவாமற் கற்பதே கல்வி; பிறர் ஏவாமல் உண்டதே ஊண். 10640

(பிறரிடத்தில் ஏகாமல் உண்பதே ஊண்.)

சாவாரைப் போலே வாழ்வார்; வாழ்வாரைப் போலே சாவார்.

சாவுக்குப் பிடித்தால் லங்கணத்துக்கு வரும்.

(சாவுக்குப் போட்டால்.)

சாவுக்கு வாடா என்றால் பாலுக்கு வருவான்.

(வந்தது போல.)

சாவுப் பானை விடியாது; சங்கடப் பானை விடியும்.

சாவேரியே ராகம்; காவேரியே தீரம். 10645

சாளக்கிராமம் சாமியாருக்குச் சோறு போடுமா?

சாற்றிலே பீ; இறுத்தாற் போல வாரு.

சாற்றிலே வேண்டாம்; தெளிவிலே வாரு.

(கீற்றிலே போடு.)

சாற்றுக்குப் புளியங்காய் நறுக்கினாற் போல.

சாறு மிஞ்சினால் பாறை: சாந்து மிஞ்சினால் குப்பை. 10650

சான்றோர் அவைப்படிற் சாவாதாம் பாம்பு.

(சாவாதாம்.)

சான்றோர் இல்லாத சபை குறவர் சேரி.

சான்றோர் கயவர்க்கு உரையார் மறை.

(மறை-இரகசியம். பழமொழி தானுாறு.)

சாஸ்திர உறுதிக்குக் கிரகணம்; மந்திர உறுதிக்குப் பாம்பு.

சாஸ்திரத்துக்குச் சாஸ்திரம்; சுகத்துக்குச் சுகம். 10655

சாஸ்திரம் பார்த்துப் பெண்ணைக் கொள்; கோத்திரம் பார்த்துப் பெண்னைக் கொடு.

சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாஸ்திராயச சுகாயச.