பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி

சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சங்காரம். 10660

சிங்க சொப்பனம் கண்ட ஆனைபோல.

சிங்கத்தின் கூட்டைச் சிறு நரி வளைத்தாற் போல்.

சிங்கத்தின் செவியில் ஈப் புகுந்தது போல.

(ஒட்டிய ஈ.)

சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு இல்லை.

சிங்கத்துக்கு நாயா சிங்கார முடி சூட்டுகிறது? 10665.

சிங்கத்துக்குப் பங்கம் இல்லை.

(பங்கமா?)

சிங்கத்துக்குப் பிறந்தது சிற்றெறும்பு ஆகுமா?

சிங்கத்தைச் சொப்பனத்தில் கண்ட ஆனை போல.

சிங்கத்தை நரி வளைத்த கதை.

சிங்கம் அரசு செய்யும் காட்டிலே நரி அம்பலம் செய்வது போல. 10670

சிங்கம் இருக்கக் குட்டி வசம் ஆமா?

சிங்கம் தன் பசிக்கு ஆனையையே தேடிக் கொல்லும்.

(கொள்ளும்.)

சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?

சிங்கார வல்லி அங்கயற் கண்ணிக்குத் தீட்டு மாறிய பின் திரட்டி சடங்கு.

(இருட்டுச் சடங்கு.)

சிங்காரித்து மூக்கு அறுத்தது போல. 10675

சிட்டாள் எட்டாளுக்குச் சமானம்; முட்டாள் எதற்கு ஆவான்?

சிட்டாளுக்கு ஒரு முட்டாள்; செருப்புத் தூக்கிக்கு ஓர் அடைப்பைக்காரனா?.

சிட்டுக் குருவிக்குப் பட்டம் கட்டினால் சட்டி பானை எல்லாம் லொட லொட என்று தத்தும்.

சிட்டுக் குருவிக்குப் பிரம்மாஸ்திரமா?

சிட்டுக் குருவிக்கு மத்தியஸ்தம் போனாற் போல. 10680