பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தமிழ்ப் பழமொழிகள்


சித்திரை அப்பன் தெருவிலே.

சித்திரை எள்ளைச் சிதறி விதை.

சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை; பங்குனி என்று பருக்கிறதும் இல்லை.

சித்திரை என்று சிறுக்கிறதும் இல்லை; வைகாசி என்று வளர்வதும் இல்லை.

(வாழ்வதும் இல்லை.)

சித்திரை ஐப்பசி சீர் ஒக்கும். 10710

(பகல் இரவு சமம்.)


சித்திரைக்குச் சிற்றப்பா, பெரியப்பா: வைகாசிக்கு வாங்காணும் போங்காணும்.

சித்திரைக் குழப்பம்.

சித்திரைக் கோடையில் உத்தரவு சாடை.

சித்திரைச் செந்தாமரையை ஒத்திட முகம் மலர்ந்தது.

(சித்திர.)

சித்திரைத் தேர் போல். 10715

(ஆகிருதி.)


சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.

சித்திரை பத்தில் சிறந்த பெருங்காற்று. ஐப்பசி பத்தில் அறையில் அடைபடும்.

சித்திரை பத்தில் சிரித்தெழுந்தார் சோழகனார்.

(சோழகனால். சோழகக் காற்று. யாழ்ப்பாண வழக்கு.)

சித்திரை பத்தில் சிலம்பன் பிறந்தால் அக்குடி நாசம்.

(புத்திரன் பிறந்தால். யாழ்ப்பாண வழக்கு)

சித்திரை பத்துக்குமேல் சிறந்த பெருங்காற்று. 10720

(தென்காசிப் பக்க வழக்கு. சித்திரை பின் ஏழு வைகாசி முன் ஏழு சிக்கலான அக்கினி நட்சத்திரம்..)


சித்திரை மழை சின்னப்படுத்தும்.

சித்திரை மழை சினை அழிக்கும்.

சித்திரை மழை செல்வ மழை,

சிததிரை மழை பெய்தால் பொன் ஏர் கட்டலாம்.

சித்திரை மாதத்தில் சிறந்துழுத புழுதியிலே கத்தரி நடாமல் கரும்பு நட்டு வீணானேன். 10725


சித்திரை மாதத்தில் சீராய் விதை விழுந்தால் பத்தரைமாற்றுப் பொன் விளையும்.