பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

225



சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.

(ஆன குடிக்கு அனர்த்தம்.)

சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனும் இல்லை; ஐப்பசி மாதத்தில் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.

சித்திரை மாதத்து உழவு பத்தரை மாற்றுத் தங்கம்.

சித்திரை மாதப்புழுதி பத்தரை மாற்றுத் தங்கம். 10730


சித்திரை மாதம் கத்திரி வெயில்.

(கத்திரி அக்கினி நட்சத்திரம்.)

சித்திரை மாதம் சிறந்த மழை பெய்யாமல் போனால் வில்லாததை விற்று வெள்ளாடு கொள்ளு.

சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம்: வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம்; ஆனி மாதம் அரைப் பொறுக்கி கல்யாணம்.

சித்திரை மாதம் செய்வது கல்யாணம்,

(செல்வது.)

சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் ஆன குடி அழியும். 10735


சித்திரை மாதம் பிறந்த சீர்கேடனும் இல்லை; ஐப்பசி மாதம் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.

சித்திரை மின்னல் ஆகாது:கடைக்கால மார்கழி இழக்கவும் ஆகாது.

சித்திரையில் சிறு மாரி.

(யாழ்ப்பாண வழக்கு.)

சித்திரையில் பெற்றாள்; மார்கழியில் மகிழ்ந்தாள்.

(எட்டு மாதத்தில் குழந்தை நடக்கும்.)

சித்துரிலே செல்லக் கூத்து. 10740


சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்ப்பது போல.

சிதம்பரத்திலே பிறந்த பிள்ளைக்குத் திருவெம்பாவை கற்றுக் கொடுக்க வேண்டுமா?

சிதம்பரம் தீட்சிதர்; திருவகிந்திரபுரம் ராட்சதர்.

சிதம்பர ரகசியம்.

சிந்தச்சே போகிற மூக்கா? 10745


சிந்தாது இருந்தால் மங்காது இருக்கலாம்.

சிந்தி அறுந்து போகிற மூக்கு எந்த மட்டில் இருக்கும்?

சிந்திப்போன பாலைப் பற்றி அழுவதில் பயன் இல்லை.

சிந்திப் போன வீட்டிலே சேராது; மங்கின வீட்டிலே வாராது.

(சிந்தின.)

சிந்தின இடத்திலே சேரேன், மங்கின இடத்திலே வாரேன். 10750