பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தமிழ்ப் பழமொழிகள்


சிந்தின பண்டம் திரட்டுப்பால்.

சிந்துக்குக் குந்தி பேசுகிறது.

சித்தை நொந்தவருக்குக் கந்தனே துணை.

சிநேகிதம் செய்தபின் சோதி; தெளிந்தபின் நம்பு.

சிநேகிதம் செய்யுமுன் ஆராய்ந்து செய்; செய்தபின் ஐயப்படாதே. 10755


சிப்பாய் நாய் துப்பாக்கிக்குப் பயப்படுமா?

சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும்; அதுபோல நல்லார்க்குச் செய்த உதவி நிலை நிற்கும்.

சிம்பிலே விளையாதது கம்பிலே விளையப் போகிறதா?

சிரங்கு முற்றிப் பவித்திரம் ஆனாற் போல.

சிரசுக்கு மேலே ஆக்கினையும் உண்டோ? 10760

(ஆக்கினை இல்லை.)


சிரஞ்சீவி பெற்றவருக்கு யமபயம் எது?

சிரட்டைத் தண்ணிர் எறும்புக்குச் சமுத்திரம்.

சிரிக்கத் தெரியாதவன் பிழைக்கத் தெரியாதவன்.

சிரித்தாயோ? சீரைக் குலைத்தாயோ?

சிரித்தாயோ? சீலையை அவிழ்த்தாயோ? 10765


சிரித்தாளாம், சிரித்தாளாம் சீழ் வடிந்த கண்ணி; அவள்மேல் ஆசை வைத்தானாம் தண்ணீர் வடிந்த உதடன்.

சிரித்துக் கழுத்தை அறுக்கிறது.

சிரித்துச் சிரித்துத் தின்ற தோசைக்குக் காசு இல்லையா?

சிரிப்பாணிக் கூத்து, சிரிப்பாய்ச் சிரித்துச் சீலைப்பேன் குத்துகிறது.

சிரிப்பாய்ச் சிரித்துத் தெருவிலே நிற்கிறது. 10770

(சிரிப்பார் சிரிக்க.)


சிரிப்பார் முன்னே இடறி விழுந்தாளாம்.

சிரிப்புக் குடியைக் கெடுக்கும்; சீதளம் உடம்பைக் கெடுக்கும்.

சிரைக்க வத்தால் அடைப்பமும் கிண்ணியும் சரியாயிருக்க வேணும்.

சிரைத்ததைச் சிரைக்கிறது போல.

சிரைத்தால் கூலி, சேவித்தால் சம்பளம். 10775


சிரைத்தால் மொட்டை வைத்தால் குடுமி.

சில்லறைக் கடன் சீர் அழிக்கும்.