பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

21


ஓடவும் மாட்டேன்; பிடிக்கவும் மாட்டேன்.

ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை. 6185


ஓடி ஆடி உள்ளங்காலும் வெளுத்தது.

ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம்.

ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.

ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல்.

ஓடி ஓடி உடையவன் வீட்டில் ஒளிந்தாற் போல். 6190


ஓடி ஓடி உள்ளங்கால் வெளுத்தது.

ஓடி ஓடி நூறு குழி உழுவதைவிட அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று.

ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமசம்.

ஓடி ஓடி வேலை செய்தாலும் நாய் உட்காரப் போவதில்லை.

ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான். 6195

(போனவன்.)

ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.

ஓடிப் போன புருஷன் வந்து கூடிக் கொண்டானாம்; உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம்.

ஓடிப் போன முயல் எல்லாம் ஒரே முயல்.

ஓடிப் போன முயல் பெரிய முயல்.

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி. 6200

(ராஜா குரு.)


ஓடிப் போனால் உமிக்காந்தல்; உள்ளே வந்தால் செந்தணல்.

ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா?

ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.

ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?

ஓடியும் கிழவிக்குப் பிறகேயா? 6205


ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம்.

ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை.