பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தமிழ்ப் பழமொழிகள்


சிற்றாத்தை பிள்ளையும் பிள்ளையோ? செத்தையிற் பல்லியும் பல்லியோ?

(செத்தபின்.)

சிற்றாள் எட்டாளுக்குச் சமானம். 16805

(சரி.)


சிற்றாற்றங்கரையிலே நான் சிறு பந்தடிக்கையிலே வாரி எடுத்தாரே, மடிமேல வச்சாரே, குப்பச்சி கையாலே குட்டுப்பட வைத்தாரே, நான் வரமாட்டேன்.

சிற்றாளைக் குட்டிக்குச் சிற்றெறும்பு சளைக்காது.

சிற்றாளைக் குட்டிக்குப் பட்டை நாமம் சாத்தியது போல், சிற்றின்பம் எண்ணார். மற்றின்பம் கண்டார்.

சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பார். 10810


சிற்றுளியால் கல்லும் தகரும்.

சிற்றுரண் இனிது.

சிற்றுாரிலே செல்லக் கூத்துக் கட்டின கதை.

சிற்றுரிலே பாரிக் கூத்தா?

(பாரக் கூத்தா?)

சிற்றெறும்புக்குக் கொட்டங்கச்சி நீர் சமுத்திரம். 10815


சிற்றெறும்பைச் சிற்றெறும்பும் கட்டெறும்பைக் கட்டெறும்பும் தேடும்.

சிறகிலும் மெல்லிசாய்ப் பொன் அடிப்பான்.

சிறகு இல்லாத பறவைபோல்.

(சிறகை இழந்து.)

சிறகு பறிகொடுத்த பறவை போல. சிறகு முளைத்தார், பறத்தலும் கற்றார். 10820

சிறப்போடு பூனை இறப்பில் இருந்தால் புறப்படமாட்டாது எலி.

சிறிசுக்கு இடம் கொடேன்; சேம்புக்குப் புளி இடேன்.

சிறய கண்ணாடி பெரிய உருக்களைக் காட்டுமாப்போலே.

சிறிய பாம்பு ஆனாலும் பெரிய தடி கொண்டு அடி.

சிறியாநங்கை இல்லையேல் சிறிய பாம்பு பிடிப்பார் இல்லை. 10825


சிறியாநங்கை செல்வம் போல.

சிறியார் இட்ட வேளாண்மை அறுவடை ஆகாது; அறுத்தாலும் களம் சேராது.