பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

229


சிறியனர் எல்லாம் சிறியார் அல்லர்.

சிறியார் கைச் செம் பொன் போல.

(சிறியார் அங்கை.)

சிறியார் செய்த சிறு பிழை எல்லாம் பெரியார் ஆயின் பொறுப்பது கடமை. 10830


சிறியாருக்கு இனியதைக் காட்டாதே; சேம்புக்குப் புளியிட்டு மசியாதே.

(புளி விட்டு ஆக்காதே.)

சிறியாரோடு இணங்காதே; சேம்புக்குப் புளியிட்டுக் கடையாதே.

சிறுக்கி சின்னப் பணம்; சிறுக்கி கொண்டை மூன்று பணம்.

சிறுக்கி சேதி தெரியாமல் செடியைச் செடியைச் சுற்றுகிறது.

(அறியாமல்.)

சிறுக்கி மனம் தெரியாமல் செடி தூக்கி அலைந்தானாம். 10835

(மயல் தெரியாமல்.)


சிறுக்கி ஜிம் என்றாளாம்; பாவாடை பர்க்கென்றதாம்.

சிறுகக் கட்டிப் பெருக வாழ்.

சிறுகச் சிறுகத் தின்றால் மலையையும் தின்னலாம்.

சிறுகச் சிறுக வெட்டினால் பெரிய மரமும் வீழ்ந்துவிடும்.

சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். 10840

(பழமொழி நானூறு.)


சிறு குரங்கின் கையால் துழா.

சிறு குழந்தை இல்லாத வீடும் வீடு அல்ல; சீரகம் விட்டு ஆக்காத கறியும் கறி அல்ல.

சிறு குழிகள் கொஞ்சம் தண்ணிரால் நிரம்பும்.

சிறுத்து இருக்கையில் வளையாதது பருத்திருக்கையில் வளையுமா?

சிறு தீ பெரு நெருப்பு. 10845


சிறு துரும்பும் பல்லுக் குத்த உதவும்.

சிறு துளி பெரு வெள்ளம்.

சிறு பாம்பையும் பெரிய தடியால் அடிக்க வேண்டும்.

சிறு பிள்ளை ஆனாலும் ஆடுவான் முப்பு.

சிறு பிள்ளை இல்லாத வீடும், சீரகம் இட்டு ஆக்காத கறியும். 10850

(கறி அல்ல.)