பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தமிழ்ப் பழமொழிகள்


சிறு பிள்ளை செய்த வேளாண்மை விளைந்தாலும் வீடு வந்து சேராது.

(இட்ட.)

சிறு பிள்ளை பயம் அறியாது.

சிறு பிள்ளை யோசனை.

சிறு பிள்ளை விளையாட்டு, அழிந்தது மாங்காடு.

சிறு பிள்ளை விளையாட்டு, சுண்டெலிக்கும் நாசம். 10855


சிறு பிள்ளை வீடு வீடு அல்ல.

சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது.

சிறு பெண் கட்டிய சிற்றாடையா?

சிறு பொறியே பெருந் தீ.

சிறு போது படியாத கல்வி அழுக்குச் சேலையில சாயம் ஏற்றினது போல. 10860


சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை.

(ஆகாரம்.)


சிறு முள்ளுக் குத்திப் பெருமலை நோகுமா?

சிறுமைப் படுகிறதை விடச் செத்தால் உத்தமம்.

(சாவது நலம்.)

சிறுமையில் கல்வி சிலைமேல் எழுத்து.

சிறுமையும் பெருமையும் தான் தர வரும். 10865


சிறு ரூபத்தை உடையவரும் அரும் பொருளைச் செய்வார்.

(அறம் பொருளை.)

சிறு வயதில் கற்ற கல்வி சிலையில் எழுதிய எழுத்துப் போலாம்.

சிறு விதை ஆகிய ஆலமரம் பெரு நிழலைக் கொடுக்கும்.

சிறைக்குக் கீழ்ச் சிறை; அதன் கீழ் அம்பட்டன.

சிறைச்சாலைக்கும் அழகு இல்லை; தேவடியாளுக்கும் முறை இல்லை. 10870


சிறைப்பட்டாயோ? குறைப்பட்டாயோ?

சின்ன ஆத்தாள் வீட்டுக்குக் சீலை வாங்கிக் கட்டலாம் என்று போகச் சின்னாத்தா ஈச்சம்பாயைக் கட்டிக் கொண்டு எதிரே வந்தாளாம்.

சின்னக் கண்ணி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்;வீடு வாசல் மெழுகி வைத்து வெள்ளிக்கிழமை அழுதாளாம்.

சின்னக் காசை அலட்சியம் செய்தால் பெரிய காசு சேராது.

சின்னக் குட்டி அகமுடையான் சித்திரை மாதம் அடித்தானாம்;அவள் அடி பொறுக்காமல் ஆடி மாதம் அழுதாளாம். 10875