பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தமிழ்ப் பழமொழிகள்



சீ

சீ என்கிற வீட்டில் நாயும் நுழையாது,

(பேயும்.)

சீ என்ற காட்டிலே செந்நாய் சேருமா?

சீ என்றால் நாயும் திரும்பிப் பாராது. 10900


சீக்கிர புத்தி பலஹீனம்.

சீக்கிரம் பழுப்பது சீக்கிரம் உளுக்கும்.

சீக்கிரான் கறிவேப்பிலை; இழுத்துக்கொண்டு திரி பிள்ளை.

(கறிப்பிலை.)

சீ சீ, இந்தப் பழம் புளிக்கும் என்றதாம் நரி.

சீ சீ என்கிறதும் இந்த வாய்தான்; சிவ சிவா என்கிறதும் இந்த வாய்தான். 10905


சீ சீ நாயே என்றால் பிள்ளை பிள்ளைதானே?

சீ சீ நாயே வாலைச் சுருட்டு.

சீட்டாளுக்கு ஒரு மோட்டாள்; செருப்புத் தூக்கிக்கு ஒர் அடைப்பைக்காரனா?

சீதனக் கள்ளி விருந்து அறியாள்.

சீதனம் வேதனை. 10910


சீதேவி தன்னுடனே செல்வத் திருப்பாற் கடலில் மூதேவி ஏன் பிறந்தாள் முன்?

சீதேவியுடன் கூட மூதேவி பிறந்தாற் போல.

(பிறந்தாள்.)

சீதை அழகால் கெட்டாள்; திரோபதை சிரிப்பால் கெட்டாள்.

(திரோபதை வாயால்.)

சீதை பிறந்தது லங்கை அழிய.

(பிறக்கவும். அழியவும்.)

சீதை முகத்திலே சிரிப்பைக் கண்டேன். 10915


சீந்தி நகைத்துத் தெருவில் அலைய விட்டுப் பாந்தி நின்று வேடிக்கை பார்ப்பது போல.