பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

233


சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?

சீபுரத்துப் பள்ளி செத்தும் கெடுத்தான்; இருந்தும் கெடுத்தான்.

(சீவரத்து. சீயபுரத்து.)

சீமந்தத்தோடு சிடுக்கு விட்டது

(அறுந்தது.)

சீமந்தப் பந்தலில் புடைவையை நடுக்கிழித்து மூட்டினாளாம். 10920


சீமான் வயிற்றில் பிறந்தது உண்டு; தறித் துணிக்குத் தரித்திரப் பட்டது இல்லை.

(திரித்துணிக்கு.)

சீமான் வயிற்றிலே பிறந்தேன்; திரித்துணிக்குச் சங்கடப்பட்டது இல்லை; பாவி வீட்டுக்கு வந்தேன்; பட்டேன் திரித்துணிச் சங்கடத்தை.

(ஏழைப் பெண் செல்வர் வீட்டில் புகுந்து சொன்னது. கந்தையில்லா வீடு)

சீமையிலே பாதி பூரீவத்ஸ் கோத்திரம்.

சீர் அற்ற பானைக்குச் செம்பொன் எது?

சீர் அற்றார் கையில் செம்பொன் விலை பெறாது. 10925


சீர் உண்டானால் சிறப்பு உண்டு.

சீர்கேடனுக்கு வாழ்க்கைப்பட்டுத் திரைச்சீலைத் துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன்; சீராளனைப் பெற்ற பிறகு திரிசீலைத்

துணிக்கு வருத்தம் ஆச்சுது.

சிர் கொண்டு வந்தால் சகோதரி

சீர்மை உண்டானால் நேர்மையும் உண்டு.

சீரக ரசத்துக்குச் சிற்றாட்கள் எட்டுப் பேர். 10930


சீரங்கத்தில் உண்டா சிவ தருமம்?

சீரங்கத்தில் உலக்கை பிடித்த மாதிரி.

(கொடுத்த.)

சீரங்கத்தில் பிறந்த பிள்ளைக்குத் திருவாய் மொழி கற்பிக்க வேண்டுமா?

சீரங்கத்துக் காகம் கோவிந்தம் போடுமா?

(காகமானாலும் பாடுமா?)

சீரங்கத்துக்குப் போகிறவன் ஓரியை மாராப்புப் போட்டது போல. 10935


சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலே பாரியைப் பறி கொடுத்தது போல.

சீரங்கத்துக்குப் போயும் சொறிக்காதல் காலில் விழுகிறதா?