பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தமிழ்ப் பழமொழிகள்



சு

சுக்கான் செட்டி சோறு போடுவானா?

சுக்கிர தசை பிட்டத்திலே அடிக்கிறது.

சுக்கிர தசை வந்தால் சுமந்து வந்து கொடுக்கும்.

சுக்கிர பகவான் புறப்பட்ட கண்ணிரிலே இண்ட முள் குத்தினது போல. 10970


சுக்கிரன் அக்கிரமி.

சுக்கிரன் முளைக்கத் தாலி கட்டின கதை,

சுக்கிரன் முளைப்பு ஒருவருக்கும் தெரியாது.

சுக்கிரனைப் போலக் கொடுக்கிறவன் இல்லை; கேதுவைப் போலக் கெடுக்கிறவன் இல்லை.

சுக்கிரீவ ஆக்ஞை. 10975


சுக்கிரீவ ஆக்ஞை எங்கும் இல்லை.

சுக்கிரோதயத்தில் தாலி கட்டிச் சூரியோதயத்தில் தாலி அறுத்தாள்.

(சுக்கிரோதயத்திற்குள், சூரியோதயத்திற்குள்.)

சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

(இல்லாத. )

சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றாளாம்; செக்குக் கண்டி இடத்தில் தலை விரித்தாளாம்.

சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுச் சூரிய நாராயணன் என்று பெயர் இடுவாள். 10980


சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்றுத் தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா?

சுக்குக் கண்ட இடத்தில் முக்கிப் பிள்ளை பெறுவாளா?

சுக்குக்குக்கு மிஞ்சின மருந்து இல்லை; சுப்பிரமணிய சுவாமிக்கு மிஞ்சின கடவுள் இல்லை.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சூரியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.

சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; தாய்க்கு மிஞ்சின உறவும் இல்லை. 10985