பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

237


சுக்குச் செத்தாலும் சுரணை போகாது.

சுக்குத் தின்று முக்கிப் பெற்ற பிள்ளையைப்போல் காப்பாற்றுகிறாள்.

சுக்குத் தின்று முக்கிப் பெற்றால் தெரியும் பிள்ளை அருமை.

சுக்கும் பாக்கும் வெட்டித் தருகிறேன்; சுள் சுள் என்று வெயில் எறி.

(தலையில் ஏறு.)

சுக்லாம் பரதரம் குட்டிக் கொள்ளும் போதே கண்ணில் குட்டிக் கொண்டது போல . 10990


சுக சரீரம் கழுதைப் பிறப்பு.

சுகத்துக்குப் பின் துக்கம்; துக்கத்துக்குப் பின் சுகம்.

சுகத்தைத் தள்ளினாலும் துக்கத்தைத் தள்ளலாகாது.

சுகத்தைப் பெற்றதும் அல்ல; தவத்தைப் பெற்றதும் அல்ல.

(அல்லி.)

சுகத்தையாவது பெறவேண்டும்: தவத்தையாவது பெற வேண்டும். 10995


சுகதுக்கம் சுழல் சக்கரம்.

(சுழல் காற்று.)

சுகந்தம் இல்லா மலர் போலே.

சுகம் கெட்டால் விரதம் தக்க வேண்டும்; விரதம் கெட்டால் சுகம் தக்க வேண்டும்.

சுகம் கெட்டால் விரதம் லாபம்; விரதம் கெட்டால் சுகம் லாபம்; இரண்டும் கெட்டால் என்ன லாபம்?

சுகம் தக்குகிறதும் இல்லை; விரதம் தக்குகிறதும் இல்லை. 11000


சுகம் மெத்தை அறியுமா?

சுகம் வந்தால் சந்தோஷப் பட்டுத் துன்பம் வந்தால் பின் வாங்குவானேன்?

சுகமும் கூழும் இறுகத் தடிக்கும்.

சுகமும் துக்கமும ஒருவர் பங்கு அல்ல.

சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு. 11005


சுகுண சுந்தரி இல்லாத வீடு சுடுகாடு.

சுங்கக்காரனிடம் சுக்துக்கம் சொல்லிக் கொள்வது போல.

சுங்கம் மாறினால் சுண்ணாம்பு கிடையாது

(சுண்ணாம்புக் கொடார்.)